காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி ரயில்வே பணிமனை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Railway workshop workers protest demanding to fill vacancies;
கோவையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில்வே பணிமனை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.
கோவை கோட்ட கிளை செயலாளர் ஜோன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். இதில் உரையாற்றிய ஜோன், ஆட்கள் பற்றாக்குறை உள்ளதாகவும் எனவே காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உயர் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தார். மேலும் தனியார் ரயிலில் ஆட்கள் போதிய அளவிற்கு இல்லாமல் இயக்குவதாக தெரிவித்தார். மேலும் பணிமனையில் அடிப்படை வசதிகளான கழிப்பிட வசதி, குடிநீர் வசதி ஆகியவற்றை செய்து தர வேண்டும். இது குறித்து ஏற்கெனவே ஏற்கெனவே உயர் அலுவலர்களுக்கு கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதாகவும், தங்களது கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்றி தர வேண்டுமெனவும் வலியுறுத்திப் பேசினார்.கோவை குட்செட் சாலையில் உள்ள ரயில்வே பணிமனையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், அடிப்படை வசதி வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.