அக்னிபத் திட்டத்தை எதிர்த்து கோவையில் ரயில் நிலைய முற்றுகை போராட்டம்
Train News Tamil -அக்னிபத் திட்டத்தை எதிர்த்து கோவையில் ரயில் நிலைய முற்றுகை போராட்டம் நடைபெற்றது.;
கோவை ரயில் நிலையத்தில் முற்றுகை போராட்டம் நடத்தியவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
Train News Tamil - இந்திய ராணுவத்தில் குறுகியகால, ஒப்பந்த முறை பணி நியமன திட்டமாக அறிவிக்கப்பட்ட அக்னிபத் திட்டத்திற்கு பல்வேறு மாநிலங்களில் இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே போல தமிழகம் முழுவதும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக இன்று கோவை ரயில் நிலையம் முன்பு திராவிட தமிழர் கட்சியினர் ரயில் நிலைய முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். முற்றுகைப் போராட்டத்தின் போது காவல் துறைக்கும் அக்கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2