வடவள்ளி சந்திர சேகர் வீட்டில் ரெய்டு நிறைவு

கே.சி.பி அலுவலகத்தில் இரண்டாவது நாளாக ரெய்டு தொடர்ந்து நடந்து வருகின்றது.;

Update: 2022-07-07 13:30 GMT

கேசிபி அலுவலகத்தில் ரெய்டு நடைபெறும் காட்சி.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நெருங்கிய நண்பர் வடவள்ளி சந்திரசேகர். அதிமுக எம்.ஜி.ஆர் அணியின் முக்கிய நிர்வாகியான வடவள்ளி சந்திரசேகர் அதிமுக அதிகாரபூர்வ நாளேடான நமது அம்மா நாளிதழின் வெளியிட்டாளரும் கூட. கே சி பி என்ற தனியார் நிறுவனத்தின் பங்குதாரரான சந்திரசேகர் அதிமுக ஆட்சி காலத்தில் அதிக அளவில் மாநகராட்சி பணிகள், ஸ்மார்ட் சிட்டி பணிகளிக்கு டெண்டர் எடுத்து கோடி கணக்கான ரூபாய் பணத்தில் பணிகளை மேற்க்கொண்டிருக்கின்றார்.

இந்நிலையில் வேலுமணி மீதான டெண்டர் முறைகேடில் நடந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளின் ரெயிடில் இரண்டு முறையில் ரெயிடுக்கு உள்ளானவர் வடவள்ளி சந்திரசேகர். இந்நிலையில் இவரின் வீடு அலுவலகங்களில் ஐ டி அதிகாரிகள் அதிரடியான ரெயிடு நடத்தியிருக்கின்றனர். நேற்று நன்பகல் 12.10 மணிக்கு ஆரம்பமான ரெயிடானது, நள்ளிரவு 12.45 மணிக்கு முடிந்திருக்கின்றன. வடவள்ளி சந்திர சேகர் வீடு, தந்தை, வீடு உள்ளிட்ட இடங்களில் நள்ளிரவில் ரெயிடு முடிந்த நிலையில் ஐ டி அதிகாரிகள் இரண்டாம் நாளாக சந்திரசேகர் அலுவலகத்தில் 19 மணி நேரமாக ரெயிடு நடத்தி வருகின்றனர். இந்த ஐடி ரெயிடில் முக்கிய ஆவணங்கள் கைபற்றப்பட்டதாக தெரிகின்றது. வடவள்ளி சந்திர சேகர் மீது வரி ஏற்ப்பு மற்றும் டெண்டர் முறைகேடு உள்ளிட்ட புகார்கள் குவிந்திருக்கின்றது. இந்த ரெயிடு பழனிச்சாமி வட்டாரத்தில் பதட்டத்தை ஏற்ப்படுத்தியிருக்கின்றது.

Tags:    

Similar News