தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டதை கண்டித்து போராட்டம்

குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ளும் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.;

Update: 2022-01-26 10:45 GMT
தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டதை கண்டித்து போராட்டம்

பல்வேறு அமைப்பினர் போராட்டம்.

  • whatsapp icon

குடியரசு தின விழா பேரணியில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் கலந்து கொள்வது வழக்கம்.  அந்த அணிவகுப்பில் கலந்து கொள்ளும் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுத்ததை கண்டித்து, கோவை புலியகுளம் பெரியார் சிலை அருகில் போராட்டம் நடைபெற்றது. இதில் திராவிடர் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டனர். அப்போது மத்திய அரசிற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து அனுமதியின்றி போராட்டம் நடத்தியவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

Tags:    

Similar News