கோரிக்கையை வ‌லியுறுத்தி தேவேந்திரகுல வேளாளர் பேரவையினர் ஆர்ப்பாட்ட‌ம்

Update: 2022-05-02 14:11 GMT

தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை, பி.சி. பட்டியலில் சேர்த்திட வேண்டும் என்று அகில இந்திய மள்ளர் பேரவையின‌ர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்ப‌ட்ட‌ன‌ர்.

தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினரை, எஸ்.சி. பட்டியல் பிரிவில் இருந்து வெளியேற்றி, பி.சி. பிரிவில் சேர்த்திட‌ வலியுறுத்தி,  கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு,  அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவை சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அகில இந்திய மள்ளர் எழுச்சிப் பேரவை தலைவர் மனுநீதிச் சோழன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மனுநீதி சோழன் கூறுகையில், இதற்கு முன்பாகவே தேவேந்திர குல வேளாளர் சமூகம் பி.சி. பட்டியலில்தான் இருந்ததாகவும்,  1936ல் எஸ்சி பட்டியலுக்கு மாற்றி உள்ளதாக தெரிவித்தார். தங்களை முன்பிருந்தவாரே பிசி பட்டியலில் சேர்க்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் தேவேந்திர குல வேளாளர் சமூகம் மற்றும் இந்திரசேனா அமைப்பினரும் கலந்து கொண்டனர்.

Similar News