காதல் ஜோடியை கட்டாயப்படுத்தி பிரித்த காவல்துறையினர்: வீடியோ வைரல்

பரமக்குடி காவல் துறையினர் அவர்களை கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லும் செல்போன் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-06-02 17:00 GMT

காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடி.

ராமநாதபுரம் பரமக்குடி பகுதியைச் சேர்ந்த கவுசல்யா (வயது 19) என்பவருக்கும், கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (வயது 23) என்பவரும் கோவையில் ஒரே நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தனர். இருவருக்கும் காதல் ஏற்பட்டது. நேற்று முன்தினம் இருவரும் கோவை காந்திபுரத்தில் உள்ள தந்தை பெரியார் படிப்பகத்தில் திருமணம் செய்தனர். இவர்களைப் பிரிக்க பெண்ணின் தரப்பினர் முயற்சி செய்து வந்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் காதல் திருமணம் தம்பதியை கட்டாயப்படுத்தி பரமக்குடி அழைத்துச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தேவகோட்டை போலீசார் பெண்ணின் உறவினர்கள் நேற்று பெண்ணை தேடி கோவை வந்தனர். சரவணம்பட்டியில் இவர்கள் இருப்பதை அறிந்த போலீசார் அங்கே சென்றனர். பின்னர் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புதுமண தம்பதியினர் ஆஜர் ஆனார்கள். அப்பொழுது தேவகோட்டை போலீசார் கடத்தல் வழக்கு பதிவு செய்து இருக்கிறோம் பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். அதற்குப் பிறகு இருவரையும் அனுப்பி வைப்பதாக உறுதி அளித்தனர். ஆனால் காதல் திருமண ஜோடி அவர்களுடன் செல்ல மறுத்து விட்டனர்.

எங்களை பிரிக்க திட்டமிட்டு சதி செய்கிறார்கள், உயிருக்கு பாதுகாப்பில்லை எனக் கூறி அவர்களுடன் செல்ல மறுத்து விட்டனர். ஆனால் சரவணம்பட்டி போலீசார் காதல் திருமணம் தம்பதியினரை கட்டாயப்படுத்தி காரில் ஏற்றி பெண்ணின் உறவினர்கள் உடன் அனுப்பியதாக தெரிகிறது. இவர்களுடன் தேவகோட்டை போலீசார் சென்றுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே சென்ற போது காரில் இருந்து கார்த்தியை மிரட்டி கட்டாயப்படுத்தி இறக்கி விட்டனர். பெண்ணை மட்டும் அவர்கள் அழைத்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து கோவை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் எங்கள் அலுவலகத்தில் திருமணம் செய்தவர்களை ஏமாற்றி அழைத்து சென்று போலீசார் பிரித்து விட்டனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். காதல் திருமண தம்பதியை சேர்த்து வைக்க வேண்டும் என புகார் தெரிவித்துள்ளனர். காதல் திருமண ஜோடியை போலீசார் கடும் எதிர்ப்பை மீறி அழைத்துச் சென்று பிரித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பரமக்குடி காவல் துறையினர் அவர்களை கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லும் செல்போன் காட்சிகள் வெளியாகி கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News