ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மறைமுக தேர்தல்: திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு

திமுகவை சேர்ந்த ஆனந்தனும், அதிமுக சார்பாக ராதாமணியும் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர்.

Update: 2021-10-22 11:30 GMT

திமுக கவுன்சிலர்கள் ஆட்சியர் சமீரனிடம் மனு.

கோவை மாவட்ட ஊராட்சி மன்ற தலைவராக அதிமுகவை சேர்ந்த சாந்திமதி தோப்பு அசோகன் உள்ளார். துணைத் தலைவராக அமுல் கந்தசாமி இருந்த நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் வால்பாறை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இதையடுத்து ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவி காலியாக இருந்தது. இந்த நிலையில் அன்னூர் 3வது வார்டில் வெற்றி பெற்ற திமுகவை சேர்ந்த ஆனந்தனும், அதிமுக சார்பாக ராதாமணியும் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். இன்று கோவையில் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவரை தேர்ந்தெடுக்கும் மறைமுக வாக்கெடுப்பு துவங்கியது. அதிமுகவிற்க்கு 9 கவுன்சிலர்கள், திமுக 6 கவுன்சிலர்களும், பாரதிய ஜனதா கட்சியில் 2 கவுன்சிலர்களும் உள்ளனர்.

இந்த நிலையில் தேர்தல் சுதந்திரமாக நடக்கவில்லை என்றும், மறைமுக வாக்கெடுப்பில் அதிமுகவிற்கு எதிராக வாக்களித்தால் எந்த பணிகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படாது என ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மிரட்டுவதாகவும், முறையான ஏற்பாடுகள் எதுவும் இல்லாமல் அதிமுக வழக்கறிஞர்கள் ஊராட்சி மன்ற தலைவரின் அறையில் அமர்ந்து திமுக கவுன்சிலர்களை மிரட்டுவதாக புகார் தெரிவித்தனர். மறைமுக வாக்கெடுப்பை புறக்கணித்த திமுக கவுன்சிலர்கள் கோவை மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரனிடம் மனு அளித்தனர். மேலும் இது குறித்து திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினிடம் முறையிட உள்ளதாக தெரிவித்தனர்.

Tags:    

Similar News