எடப்பாடி பழனிச்சாமிக்கு போஸ்டர் மூலம் கண்டனம் தெரிவித்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள்

OPS supporters condemning Edappadi Palaniswami;

Update: 2022-07-03 04:30 GMT

எடப்பாடி பழனிச்சாமிக்கு கண்டனம் தெரிவித்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கோவையில்  ஒட்டியுள்ள போஸ்டர்

எடப்பாடி பழனிச்சாமிக்கு கண்டனம் தெரிவித்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கோவையில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் இரு தினங்களுக்கு முன்பு வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் சார்பில், எடப்பாடி பழனிச்சாமியை தலைமை ஏற்க அழைக்கும் படி கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது. இந்நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள்"உள்ளாட்சி இடைத் தேர்தலில் கட்சி சின்னத்தை பெற ஓபிஎஸ் கையெழுத்து போட தயார் என அழைத்தும் கையெழுத்து போட மறுத்து புரட்சித்தலைவரின் இரட்டை இலை சின்னத்தை முடக்கிய எடப்பாடி பழனிச்சாமிக்கு கடும் கண்டனம்" என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் கழக செய்தி தொடர்பாளர் புகழேந்தியின் சார்பில் போஸ்டர்கள் கோவை மாநகரில் சில இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.

Tags:    

Similar News