கோவையில் மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் வீடுகளில் என்.ஐ.ஏ. சோதனை

3 பேரும் மாவோயிஸ்ட் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது.;

Update: 2021-10-12 05:45 GMT

புலியகுளம் தினேஷ் வீடு.

கேரள மாநிலத்தில் கடந்த வாரம் மாவோயிஸ்ட் ஒருவர் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 23 இடங்களில் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் 3 இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது. புலியகுளம் பகுதியை சேர்ந்த பல் மருத்துவரான தினேஷ், சுங்கம் பகுதியை சேர்ந்த டேனிஷ் மற்றும் பொள்ளாச்சி அருகேயுள்ள அங்கலக்குறிச்சி பகுதியை சேர்ந்த சந்தோஷ் ஆகிய 3 மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 3 பேரும் மாவோயிஸ்ட் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது. இன்று காலை 6.30 மணி முதல் இந்த சோதனை நடத்தப்படுகிறது. சோதனையின் முடிவில் ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதா என்பது குறித்து தெரியவரும். 3 பேரின் வீடுகளின் முன்பும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News