mnm president kamal will contest kovai 2024 லோக்சபா தேர்தல் :கோவை தொகுதியில் போட்டியிட மநீம தலைவர் கமல் திட்டம்
mnm president kamal will contest kovai 2024 ம் ஆண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட மக்கள் நீதி மய்ய தலைவரும் நடிகருமான கமலஹாசன் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.;
கோவையில் நடந்த மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் பேசிய நடிகர் கமல். (கோப்பு படம்)
mnm president kamal will contest kovai
இந்தியாவில் 2024 ம் ஆண்டு பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளை அனைத்து கட்சிகளும் கடந்த ஒரு வருட காலமாகவே மேற்கொண்டு வருகிறது.இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகளும் இப்போதே களத்தில் இறங்கியுள்ளன.
அதிமுக பாஜ கூட்டணியிலும், திமுக இந்தியா கூட்டணியிலும் உள்ளது. இருந்த போதிலும் பாஜ அதிமுக கூட்டணிபுகைச்சல் இன்று வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
அந்த வகையில் மக்கள் நீதி மய்ய கோவை மண்டல நிர்வாகிகள் கூட்டம் நேற்று கோவையில் நடந்தது. இதில் கட்சித்தலைவரும் நடிகர் கமலஹாசனும் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசும்போது சனாதனம் என்ற வார்த்தையானது தற்போது தமிழகத்தில் பிரதானமாக பேசப்பட்டு அதற்காக ஒரு சிலர் வார்த்தையில் தர்ம அடி வாங்குகின்றனர்.
அரசியலைப் பொறுத்தவரை நம்மைத் தாக்குவதற்கு முன் நாம் அதனை மாற்றியமைத்தாக வேண்டும். முன்னாள் முதல்வர் கருணாநிதி என்னை திமுகவில் சேர அழைப்பு விடுத்தார். கம்யூனிஸ்ட்டில் சேரப்போகிறேன் என சொல்லியிருக்க வேண்டும் அல்லது என் தந்தை காங்கிரசில் இருந்ததால் காங்கிரசில் சேர்கிறேன் என சொல்லியிருக்க வேண்டும். அப்போதே அரசியலில் நான் பயணித்திருக்க வேண்டும்.
mnm president kamal will contest kovai
வரும் 2024 லோக் சபா தேர்தலில் என்னை கோவையில் மீண்டும் போட்டியிடச்சொல்லி அழைக்கின்றனர். சென்னை, மதுரைக்கு வாருங்கள் என்றும்அழைக்கின்றனர்.ஆனால் என்னைக் கோவைக்கு அழைப்பது மட்டும் போதாது.அனைத்து பூத்களிலும் வேலை செய்ய 40 ஆயிரம் பேர் தேவை. சட்டசபை தேர்தலில் அத்தனை மக்கள் ஓட்டளித்தும் நம்மை ஏமாற்றியது யார் என இனங்காணவேண்டும். அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம். இந்த சூழ்ச்சிக்கு இனி நாம் ஆளாக கூடாது. விக்ரம் படத்துக்கு கூட்டம் சேர்ந்தது. மக்கள் நீதி மய்யத்துக்கு சேர்க்க முடியவில்லை என்பதை நம்ப மாட்டேன்.
ஏற்கனவே கடந்த தேர்தலில் போட்டியிட்டுமூக்குடைபட்டுவிட்டேன். எனவே கோவையில் மீண்டும் போட்டியிட வேண்டும் என்றால் களத்தினைத் தயார் செய்யுங்கள். 40 தொகுதிகளுக்கும் வேலை செய்ய வேண்டும். தமிழகத்துக்கு நல்ல தலைமை என்பது தேவை. நான் மட்டும் தேரை இழுத்துவிட முடியுமா? நாம் அனைவரும் சேர்ந்து எளிதாக இழுக்க முடியும். நேர்மைக்கு எல்லா இடங்களிலும் மரியாதை உண்டு.
நாம் இந்தி ஒழிக என்று சொல்லவில்லை. தமிழ்வாழ்க என்றுதான் சொல்கிறோம். இந்தி பேசினால் தான் வேலை என்றால் அந்த வேலை வேண்டாம்.
ராஜராஜ சோழன் கோவில் கட்டியபோது இந்தி தெரிந்தால் தான் வேலை தருவேன் என சொல்லவில்லை. ஜாதி பேசி கடவுளை துாற்றி என் கடவுளைப்போற்றி பேசுவது மருந்து ஆகாது. அன்பு ஒன்றே எனக்கு தெரிந்த மதம். அதைவிட பெரிய மதம்மனிதம் .எனவே களத்தை தயார்செய்யுங்கள் என்று பேசினார்.