கோவையில் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

கோவையில், லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-04-18 12:15 GMT

ஐந்து முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவையில்  லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும், சுங்கக் கட்டண உயர்வை குறைக்க வேண்டும், வாகன புதுப்பித்தல் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், வாகன காப்பீடு கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், ஆன்லைன் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை மாவட்ட தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்,  15 லாரி உரிமையாளர் சங்க கூட்டமைப்புகளைச் சார்ந்த 100 க்கும் மேற்ப்ப‌ட்டோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பல்வேறு வித கட்டணம் உயர்வால் லாரி உரிமையாளர்களும் ஓட்டுநர்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருவதாகவும், எனவே அவற்றை ரத்து செய்து,  லாரி தொழிலை நம்பியுள்ள அவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Tags:    

Similar News