கோவையில் சாலையோரம் இருந்த மரம் முறிந்து விழுந்ததில் 2 கார்கள் சேதம்

Coimbatore News Today in Tamil -கோவையில் சாலையோரம் இருந்த மரம் முறிந்து விழுந்ததில் 2 கார்கள் சேதமடைந்தன.;

Update: 2022-08-25 04:17 GMT

கோவையில் மரம் விழுந்ததால் சேதம் அடைந்த கார்கள்.

Coimbatore News Today in Tamil -கோவை லட்சுமி மில்ஸ் பகுதி எப்போதும் பரபரப்பாகவே காணப்படும் பிரதான சாலை ஆகும். இங்கிருந்து ராமநாதபுரம் நோக்கி செல்லும் பாதையில் தனியார் உணவகத்திற்கு எதிரே பழமையான மரங்கள் சில உள்ளன. இந்நிலையில் கோவையில் மதிய வேளையில் லேசான மழை பெய்தது. அப்போது லட்சுமி மில்ஸ் பகுதியில் சாலையோரம் இருந்த மரம் திடீரென முறிந்து சாலையின் ஒரு பகுதியில் விழுந்தது. இதில் இரண்டு கார்கள் சேதமடைந்தன.

பிரதான சிக்னலுக்கு 50 மீட்டர் தொலைவில் இந்த மரம் விழுந்த போதிலும் நல்வாய்ப்பாக மரம் விழுந்த போது வாகனங்கள் ஏதும் செல்லாத நிலையில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பிரதான சாலை என்பதால் மரம் விழுந்த போது லேசான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைவதற்கு முன்பாகவே பழமையான பட்டுப்போன மரங்களை கண்டறிந்து மாநகராட்சி அதிகாரிகள் முன்கூட்டியே அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News