கனமழையால் கோவையில் பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர் மழை காரணமாக இன்று ஒருநாள் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.;

Update: 2021-11-10 03:30 GMT

கோவை ஆட்சியர் சமீரன்

வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இன்றும் கோவையில் பரவலாக மழை பெய்து வருகிறது. வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன், பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

தொடர் மழை காரணமாக இன்று ஒருநாள் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார். விடுமுறை அறிவிப்பு தாமதமாக வெளியிட்டப்பட்டதால், பல மாணவர்களுக்கு சென்று விட்டனர். விடுமுறை அறிவிப்பு தெரிந்த பின்னர் மீண்டும் வீடுகளுக்கு திரும்பினர். தாமதமாக விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதாகவும், காலை 7 மணியளவில் விடுமுறை அறிவிப்பு வெளியிட்டால் தான் பயனுள்ளதாக இருக்குமெனவும் பொது மக்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News