தீபாவளி தினத்தன்று மதுக்கடைகளை மூட ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் மனு

ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் காலி மதுப்பாட்டில்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்திருந்தனர்.

Update: 2021-10-25 11:45 GMT

மனு அளிக்க வந்த ஹிந்துஸ்தான் சேவா மக்கள் இயக்கத்தினர்.

தீபாவளி நாளன்று டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தியும், பட்டாசுகள் வெடிக்க கட்டுபாடுகள் விதிக்க வேண்டாம் என்பதை வலியுறுத்தியும் ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் காலி மதுப்பாட்டில்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்திருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி நாளன்றும் மது கடைகள் இயங்குவதால் பலரும் மது அருந்தி விட்டு போதையில் பல்வேறு வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவதாகவும், அந்நாளில் மதுவிற்காக அதிக பணத்தை செலவிடுவதாகவும் தெரிவித்தனர். எனவே தமிழக முதல்வர் தீபாவளி நாளன்று டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என்றும், அந்நாளில் பட்டாசுகள் வெடிப்பதற்கு எவ்வித கட்டுபாடுகளையும் விதிக்காமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து மது பாட்டில்களை வாங்கி வைத்து கொண்டு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள், அவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் மனு அளிக்க அனுமதித்தனர்.

Tags:    

Similar News