கொட்டித்தீர்த்த கனமழை:கோவையில் நீரில் மூழ்கிய மேம்பால சுரங்கப்பாதைகள்

மாநகரின் முக்கியமான பகுதிகளில் மழையில் தேங்கியுள்ளதால் வாகன நெரிசல் அதிகளவு ஏற்பட்டுள்ளது

Update: 2022-08-27 07:30 GMT

கோவை மாநகரில்  பெய்த பலத்த மழையால் மேம்பாலத்தின் கீழ் தேங்கியுள்ள மழை நீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

கோவையில் இரவு முழுவதும் பெய்த கன மழையின் காரணமாக கோவை மாநகரில் உள்ள முக்கியமான மேம்பாலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது உப்பிலிபாளையம் மேம்பாலம் மேலே ரயில் செல்லக்கூடிய பாலமாகவும் கீழே வாகனங்கள் சொல்லக்கூடிய பாலமாகவும் இது உள்ளது இதில் தண்டவாளத்தை தண்ணீர் மூழ்க்கும் அளவு மழைநீர் தேங்கியுள்ளது

இந்த சப்- வே  வழியாக  செல்லும் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது குப்பையும் குலமாக சுரங்கப்பாதை முழுவதும் கழிவுநீர் தேங்கியது போல காட்சியளிக்கிறது கோவையில் இதே போல பல பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது அவினாசி சாலை மேம்பாலத்தின் கீழ் மழை நீர் தேங்கியதால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது மாநகரின் முக்கியமான பகுதிகளில் மழையில் தேங்கியுள்ளதால வாகன நெரிசல் அதிகளவு ஏற்ப்படுகிறது. சங்கனூர் ஓடையில் மழை வெள்ளம் ஓடியது, மேலும், . கோவை இரயில் நிலையம் அருகே லங்கா கார்னர் பாலத்தின் கீழும் வெள்ள நீர் தேங்கியது. இதில் சிக்கிய  ஒரு கார்  மீட்கப்பட்டது.

இந்நிலையில், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் மழையால் வெள்ள நீர் தேங்கிய பகுதிகளை ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, கூடுதலான மின் மோட்டார்கள் வரவைக்கப்பட்டு வெள்ளநீர் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

இப்பகுதியில் விரைவில் வெள்ளநீரை அகற்றும் பணியில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த வெள்ள நீர் விரைவாக அகற்றப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் பொழுது இதே நிலை நீட்டிப்பதால் இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் இதற்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


Tags:    

Similar News