கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் தர்ணா

மாவட்ட ஆட்சியர் சமீரன் நேரில் வந்து கோரிக்கை மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் கலைந்து சென்றனர்;

Update: 2022-09-20 05:30 GMT

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுப்பட்ட மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சு நடத்திய மாவட்ட ஆட்சியர் சமீரன்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுப்பட்ட மாற்றுத்திறனாளிகள்  மாவட்ட ஆட்சியர் நேரில் வந்தால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம்  எனக்கூறியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளுக்கு கருணை அடிப்படையில் வயது வரம்பு முடிவதற்குள் 4% இட ஒதுக்கீட்டில் அரசு வேலை வழங்க வேண்டும், குடிசை மாற்று வாரிய வீடுகளை கட்டணம் இல்லாமல் வழங்க வேண்டும், OAP உதவித்தொகையை பத்தாயிரம் ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென அமர்ந்து  மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்கள் குறைதீர்க்கும் முகாமுக்கு வந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் தர்ணாவில் ஈடுபட்ட போது,  ஆட்சியர் நேரில் வந்து பேசினால் மட்டுமே கடந்து செல்வோம் என அவர்கள் கூறியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தகவறிந்த  அந்த இடத்துக்கு  நேரில் வந்த மாவட்ட ஆட்சியர் சமீரன் , கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிமொழி அடுத்ததை அடுத்து மாற்றுத்திறனாளிகள் கலைந்து சென்றனர். தர்ணாவில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News