மாநில அரசின் திட்டஙகளை ஆளுநர் தெரிந்து கொள்வது உரிமை மீறல் இல்லை: வானதி சீனிவாசன்

எந்த தவறோ உரிமை மீறலோ இல்லை. இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதும் கிடையாது என்றவர் இது வழக்கமாக நடப்பது தான் என தெரிவித்தார்.

Update: 2021-10-26 14:00 GMT

நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைத்த வானதி சீனிவாசன்.

நமக்காக நம்ம எம்.எல்.ஏ என்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மக்களை சந்தித்து நன்றி தெரித்தார்.பின்னர் கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு பாஜக சார்பில் நிவராண பொருட்கள் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் குறைகளை கேட்டு வருவதாகவும் நடவடிக்கைகள் எடுக்க மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் மனுக்கள் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

கோவை மாநகராட்சி பகுதியில் குப்பைகள் தேங்கி இருப்பதாகவும் மோசமான சாலைகளால் விபத்துகள் ஏற்படுவதாக கூறிய அவர் சாக்கடை கால்வாய்களை உடனடியாக தூர்வார நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.தமிழக அரசிடம் சட்டமன்றத்தில் தனது தொகுதியில் உள்ள பிரச்சினைகள் குறித்து முன்வைக்கபட்ட கோரிக்கைகள் ஏற்கப்பட்டு சில பணிகள் துவங்கி இருகப்பதாகவும் அதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

சசிகலா தொடர்பான கேள்விக்கு, சசிகலாவை வரவேற்பதும், வரவேற்காததும் அதிமுகவின் முடிவு எனவும் அதில் பாஜகவிற்கு எந்த பங்கும் இல்லை என தெரிவித்தார்.தமிழக அரசிடம் ஆளுநர் அறிக்கை கேட்டுள்ளது தொடர்பான கேள்விக்கு ஆளுநர் புதிதாக பதவியேற்றுள்ளார். மாநில அரசிடம் திட்டங்களை தெரிந்து கொள்வதற்காக கோரிக்கை வைத்திருக்கிறார். தமிழகத்தில் என்னென்ன திட்டங்கள் நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள கேட்டு இருக்கிறார். இதில் எந்த தவறோ உரிமை மீறலோ இல்லை எனவும் இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதும் கிடையாது என்றவர் இது வழக்கமாக நடப்பது தான் என தெரிவித்தார்.

Tags:    

Similar News