அடுத்த ஆண்டில் விவசாயிகள் 50 ஆயிரம் பேருக்கு இலவசமின்சாரம் : அமைச்சர் தகவல்

1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்ட நிலையில் அடுத்த வருடம் 50 ஆயிரம் பேருக்கு இலவச மின்சாரம் வழங்க இலக்கு;

Update: 2022-07-16 04:15 GMT

கோவையில் நடைபெற்ற கண்காட்சியில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

திமுக ஆட்சி பொறுப்பேற்ற ஒரு வருடத்தில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்ட நிலையில் அடுத்த வருடம் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கொடிசியாவில் சர்வதேச அளவிலான விவசாய கண்காட்சியை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் அவர்கள், மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி கண்காட்சியை தொடங்கி வைத்தனர். கண்காட்சியை பார்வையிட்ட அமைச்சர்கள் பின்பு வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையர் மேயர் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது :கோவையின் தொழில் முனைவோர்கள் மாவட்ட வளர்ச்சிக்கான சிறப்பான பங்காற்றி வருகின்றனர். வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் கொடுத்தவர் முதல்வர் ஸ்டாலின். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்பதை துரிதமாக செயல்படுத்தி வருபவர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். ஒரே ஆண்டில் 1 லட்சம் விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்.2 லட்சம் விவசாயிகள் பயன் பெற உள்ளனர். முதலமைச்சர் தொடங்கி வைப்பதாக இருந்தது. கொரோனாவால் வர முடியாததால் வேளாண் அமைச்சரை அனுப்பி வைத்துள்ளார்.

 தொடர்ந்து வேளாண் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் பேசியதாவது : வேளாண்மை திமுக ஆட்சியில் மதிக்கப்படுகிறது.வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் போட்ட முதலமைச்சர் ஸ்டாலின் தான்.கொரோனவில் மருத்துவர்களை போலவே விடாது உழைத்தவர்கள் விவசாயிகளே. விவசாயத்தை நவீன மயமாக்க வேண்டும். பேண்ட் அணிந்தவர்களும் விவசாயம் செய்யும் நிலை உருவாகியுள்ளது. ஒரு லட்சம் விவசாயிகளுக்கு 6 மாதங்களில் இலவச மின்சாரம் வழங்கி மின்சார துறை அமைச்சர் சாதனை புரிந்துள்ளார். இலவச மின்சாரத்திற்காக சுமார் பல ஆயிரம் கோடியை தமிழக வேளாண்துறை வழங்கி வருகிறது.நீலகிரி மழை பாதிப்புகளை பார்வை இட வருவாய் துறை மற்றும் மின் துறை அமைச்சர்களை முதல்வர் நேரில் செல்ல உத்தரவிட்டுள்ளார் என்றார் அவர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் கூறியதாவது: இந்த கண்காட்சியை தொடங்கி வைப்பதில் ஒரு விவசாயி ஆக மகிழ்ச்சி அடைகிறேன், விவசாயி ஆகிய எங்களை போன்றவர்களுக்கு புது தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை தெரிந்து கொள்ளவும் அறிந்து கொள்ளவும் இது போன்ற கண்காட்சி உதவியாக இருக்கும், தொழில் அதிபர்கள் இன்றைய தினம் வேட்டியை கட்டி கொண்டு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ளனர்.

எனவே வேளாண்மை மதிக்கப்படுகிறது, வேளாண் துறைக்கு முதல்வர் தனி பட்ஜெட் அறிவித்து உள்ளார் உழவர்களுக்கு எல்லாம் இந்த அரசாங்கத்தால் மதிக்கப்டுகிரோம் என்ற உணர்வு விவசாயிகளுக்கு ஏற்பட்டு உள்ளது, அதை மெருகூட்டும் வகையில் புதிய கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது நவீன தொழில் நுட்பம் போன்றவற்றை விவசாயிகள் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது.

பாம்பு கடித்து இறப்பவர்களுக்கு மருத்துவ உதவி, இரவு நேரத்தில் மோட்டார் இயக்கம் போன்றவற்றிற்கு இழப்பீடு அரசாங்கத்தால் கொடுக்கப்படுகிறது, மோட்டார்களை வீட்டில் இருந்தே இயக்குவதற்கான கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டு 10ஆயிரம் விவசாயிகளுக்கு சோதனை முறையில் கொடுக்கப்பட்டு உள்ளது, விவசாயிகளுக்கு எப்போதும் எல்லாமுமே போராட்டம் தான்.  தென்னை விவசாயிகளுக்கு நெல் புகை, வண்டு கடி மற்றும் வெள்ளை ஈக்கள் போன்றவற்றை கட்டுப்படுத்த மனித வளத்துறை மற்றும் வேளாண் பல்கலைக்கழகம் மூலம் ஆராய்ச்சி பணிகளை தொடங்கி உள்ளோம், பூச்சி தாக்குதல் ஆரம்பித்த உடனே மருந்துகளை தெளிக்க ஆலோசனை கூறுகிறோம் இப்போது 15கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது,

இயற்கை விவசாயம் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் வந்து உள்ளது, அதை கொண்டு வர வேண்டும் என்பதற்காக 1 லட்சம் விவசாயிகள் மும் வந்து உள்ளனர், இயற்கை விவசாயம் செய்ய 3 ஆண்டுகள் தொடர்ச்சியாக பயன்பாட்டுக்கு வந்து மருந்துடைய தாக்கம் இல்லாமல் பயிர் வளரும், அதற்கு இயற்கை உரங்கள் மானியத்துடன் கொடுக்கப்படுகிறது.கோவையை போன்ற மாவட்ட அளவில் நடத்துகின்ற பணியை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முன்னெடுத்து உள்ளனர். இந்த ஆண்டு 50 ஆயிரம் மின் இணைப்பு கொடுக்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவித்து உள்ளேன், ஆனால் 6 மாதத்தில் 1 லட்சம் மின் இணைப்பு என்பதை அறிவித்தது முதல்வர். ஆனால் முடியாது என்றனர், அதை முடித்து காட்டியவர் முதல்வர் என்றார் அமைச்சர் பன்னீர்செல்வம்.


Tags:    

Similar News