உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கோவையில் காவல்துறை கொடி அணிவகுப்பு

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கோவையில் காவல்துறை கொடி அணிவகுப்பில் 225 காவலர்கள் கலந்து கொண்டனர்.;

Update: 2022-02-08 13:30 GMT

கோவையில் காவல்துறை கொடி அணிவகுப்பு நடைபெற்றது. 

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு காவல்துறையினர் தொடர் பாதுகாப்பு பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை சிவானந்த காலனி பகுதியில் காவல்துறை கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

இதில் உக்கடம் காவல் நிலைய எல்லை,காட்டூர் காவல் நிலைய எல்லை, சாய்பாபா காலனி காவல் நிலைய எல்லை, ஆர்.எஸ் புரம் காவல் நிலைய எல்லையை சேர்ந்த 225 காவலர்கள் கலந்து கொண்டனர். இந்த கொடி அணிவகுப்பானது சிவானந்த காலனியில் துவங்கி கண்ணப்ப நகர், இரத்தினபுரி வழியாக 60 அடி ரோட்டை வந்தடைந்தது.

இந்த கொடி அணிவகுப்பில், கோவை மாநகர காவல்துறையினருக்கு ரோந்து பணிக்காக அளிக்கப்பட்ட புதிய சிவப்பு நிற ரோந்து வாகனங்கள் (8 வாகனங்கள்) இடம்பெற்றன. கொடி அணிவகுப்பிற்கு முன்புறம் காவல்துறையினரின் இசை வாத்திய குழுவினர் தேசிய பாடல்களை இசைத்தபடி சென்றனர்.

Tags:    

Similar News