அதிமுகவினர் மீது பொய்வழக்கு போடப்படுகிறது: முன்னாள் அமைச்சர் எஸ்‌.பி.வேலுமணி புகார்

கோதவாடி குளத்தில் நேற்று முந்தினம் திமுக, அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது ‌

Update: 2021-12-23 10:15 GMT

அதிமுகவினர் புகார் மனு.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள கோதவாடி குளத்தில் நேற்று முந்தினம் திமுக, அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. முன்னாள் சட்டபேரவை துணைதலைவரும், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமனை திமுகவினர் தாக்கியது. தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி, முன்னாள் அமைச்சர் எஸ்‌பி. வேலுமணி தலைமையில் அதிமுகவினர் பந்தயசாலை பகுதியில் உள்ள மேற்கு மண்டல காவல் துறை தலைவரிடம் புகார் மனு அளித்தனர். அதனைதொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது,

கோதவாடி பகுதிகள் அங்கிருந்த விவசாயிகளுடைய நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் தூர்வாரி கொடுத்தார். தொடர்ச்சியாக மழை பெய்ததால் தண்ணீர் தேங்கி குளம் நிரம்பியுள்ளது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் பொங்கல் விழா நடத்தினர்.

அதற்கு சென்ற பொள்ளாச்சி ஜெயராமன் சட்டமன்ற உறுப்பினர் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் அரசு பதவியில் இல்லாதவர்கள் அங்கே வந்தத்ல் தகாத வார்த்தைகளில் பேசி அவமானப்படுத்தியுள்ளனர். இந்த மோசமான செயலில் ஈடுபட்டதற்குப் பின்னாலும் திமுகவினர் மீது வழக்கு போடவில்லை ‌ பொள்ளாச்சி ஜெயராமன் மீது வழக்கு போட்டு உள்ளார்கள். அதற்கு எதிர்க்கட்சி தலைவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக தற்போது கோவை மாவட்டத்தில் இருக்கக்கூடிய அதிமுக தொண்டர்கள் மீதும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் தொடர்ந்து பொய் வழக்கு போட்டு உள்ளார்கள். திமுக மீது எந்த வழக்கும் போடவில்லை. இந்தப் போக்கை கண்டித்து மேற்கு மண்டல காவல்துறைத் தலைவரிடம் மனு கொடுத்துள்ளோம். நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார் என அவர் கூறினார்.

Tags:    

Similar News