கோவை மாவட்ட ஆட்சியரின் பெயரில் போலியான வாட்ஸ்அப் கணக்கு: போலீசார் விசாரணை

Coimbatore News Today in Tamil -கோவை மாவட்ட ஆட்சியரின் பெயரில் போலியான வாட்ஸ்அப் கணக்கு தொடங்கி மோசடியில் ஈடுபட முயன்ற அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து போலீசார் விசாரணை.

Update: 2022-06-23 02:00 GMT

மாவட்ட ஆட்சியர் சமீரனின் டுவிட்டர் பதிவு.  

Coimbatore News Today in Tamil -கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் ஐஏஎஸ் பெயரில் போலியான வாட்ஸ் அப் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. போலி கணக்கு தொடங்கிய நபர்கள் அமேசான் கிஃப்ட் pay coupon மூலம் பணம் அனுப்ப குறுஞ்செய்தி அனுப்புவதாக தெரிகிறது. இந்த போலி கணக்கு குறித்து தெரியவந்த மாவட்ட ஆட்சியர் சமீரன், தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். தனது பெயரில் தொடங்கப்பட்டுள்ள போலி வாட்ஸ்அப் கணக்கின் screenshot உடன் பதிவிட்டுள்ள அவர், தனது பெயர் மற்றும் புகைப்படம் கொண்ட வாட்ஸ்அப் எண்ணில் இருந்து மெசேஜ் வந்தால் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.


இந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சியரின் பெயரில் போலி கணக்கு தொடங்கி அவர்கள் குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் இதே போல திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் மாறும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி போலி வாட்ஸ்அப் கணக்கு தொடங்கப்பட்டு, மோசடியில் சிலர் ஈடுபட முயன்ற குறிப்பிடத்தக்கது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News