கோவை மாவட்டத்தில் காலாவதி உணவு விற்பனை: கடைகளில் அதிகாரிகள் சோதனை

கோவையில், காலாவதி உணவுப் பொருள் விற்பனை தொடர்பான சோதனை நடத்திய அதிகாரிகள், இது தொடர்பாக கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.;

Update: 2022-03-23 01:45 GMT

கோவையில், கடைகள் சிலவற்றில், காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதன்பேரில், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையில் 7 குழுவினர், கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அவ்வகையில், கோவை அவினாசி சாலை, பஸ் ஸ்டாண்டு, ரயில் நிலையம், மசக்காளிபாளையம், காந்திபுரம், சிங்காநல்லூர், பீளமேடு, கணபதி, ஆர்.எஸ்.புரம், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், அன்னூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல இடங்களில், கடைகள், வணிக வளாகங்களில் சோதனை நடத்தினர்.

அப்போது, 69 கடைகளில் இருந்து 423 கிலோ காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் காலாவதியான உணவு பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 41 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006, உட்பிரிவு 55, 63-ன் கீழ், அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர்.

அதேபோல், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்திய, 15 கடைகளுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் அதிகாரிகள் விதித்தனர்.

Tags:    

Similar News