கேரளாவில் தக்காளி காய்ச்சல் எதிரொலி: கோவையில் கண்காணிப்பு தீவிரம்

கேரளாவில் பரவும் தக்காளி காய்ச்சலின் எதிரொலியாக தமிழக-கேரள எல்லையான கோவை வாளையார் சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனை

Update: 2022-05-10 17:00 GMT

 தமிழக-கேரள எல்லையான கோவை வாளையார் சோதனை சாவடியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்

கேரளாவில் தக்காளி காய்ச்சல் எதிரொலியாக கோவை-கேரளா எல்லை  கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கேரளாவில் பரவும் தக்காளி காய்ச்சலின் எதிரொலியாக தமிழக-கேரள எல்லையான கோவை வாளையார் சோதனை சாவடியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.கேரளா மாநிலம் கொல்லம் பகுதியில் தக்காளி காய்ச்சல் எனப்படும் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை தாக்கும் இந்த காய்ச்சல், சருமத்தில் சிவப்பு திட்டுக்கள் ஏற்படுத்துகிறது.

இதுமட்டுமின்றி குழந்தைகளுக்கு, உடல்வலி, சோர்வு, கைகால்கள் வெள்ளை நிறமாக மாறுதல், முகத்தில் சிவப்பு நிற புள்ளிகள் தோன்றுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுத்துகிறது.இந்நிலையில் தமிழக - கேரளா எல்லைப்பகுதியான வாளையார் பகுதிகளில், காய்ச்சல் அறிகுறிகளுடன் வருவோரிடம் கோவை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

இந்த நோய் எளிதில் சரியாகி விடும் என தெரிவிக்கும் கேரளாவை சேர்ந்த நபர் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றார்.தொடர்ந்து கோவையில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு காய்ச்சல் அறிகுறி உள்ளதா என்பது குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.


Tags:    

Similar News