கோவை பேரூராட்சிகளில் திமுக அபார வெற்றி
மொத்தம் உள்ள 33 பேரூராட்சிகளில் 31 பேரூராட்சிகள் திமுக வசமானது.;
கோவை மாவட்டத்தில் உள்ள 33 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து திமுக முன்னிலை பெற்று வந்தது. இறுதியில் பேரூராட்சிகளில் உள்ள 504 இடங்களில் திமுக 378 இடங்களில் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. அதிமுக 71, சுயேச்சை 27, காங்கிரஸ் 12, சிபிஎம் 9, பாஜக 5, சிபிஐ 1, மதிமுக 1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. மொத்தம் உள்ள 33 பேரூராட்சிகளில் 31 பேரூராட்சிகள் திமுக வசமானது. வெள்ளலூர் பேரூராட்சியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. மோப்பிரிபாளையம் பேரூராட்சியை சுயேச்சைகள் கைப்பற்றியுள்ளனர்.