கோவை மாநகராட்சியை கைப்பற்றும் திமுக
இதுவரை அறிவிக்கப்பட்ட 42 இடங்களில் 40 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.;
கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதல் திமுக முன்னிலை வகித்து வருகிறது. இதுவரை அறிவிக்கப்பட்ட 42 இடங்களில் 40 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. திமுக 30, சிபிஎம் 3, காங்கிரஸ் 3, கொமதேக 2, மதிமுக 1, சிபிஐ 1 ஆகிய இடங்களில் வென்றுள்ளது. இதேபோல அதிமுக 1, எஸ்.டி.பி.ஐ 1 இடங்களில் வென்றுள்ளது. அதிமுக மேயர் வேட்பாளராக அறியப்பட்ட கிருபாலினி கார்த்திகேயன் 7 வது வார்டில் தோல்வியை தழுவினார்.