கோவையில் 31 பேரூராட்சிகளை கைப்பற்றிய திமுக
பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 504 பதவிகளில் இதுவரை திமுக 353 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.;
கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள 33 பேரூராட்சிகளில் 31 பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியது. வெள்ளலூர் பேரூராட்சியை அதிமுக கைப்பற்றியது. மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 10 சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர். பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 504 பதவிகளில் இதுவரை திமுக 353 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 70 இடங்களிலும், சுயேச்சை 27 இடங்களிலும் காங்கிரஸ் 11 இடங்களிலும், சிபிஎம் 9 இடங்களிலும், பாஜக 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதேபோல சிபிஐ, மதிமுக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.