சாதி ஆணவ கொலைகளை தடுக்க சிறப்பு சட்டமியற்ற கோரி ஆர்ப்பாட்டம்

சாதி ஆவணப் படுகொலைகள் அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்க சிறப்பு சட்டமியற்ற வேண்டும்.

Update: 2021-12-16 10:00 GMT

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது சாதி ஆணவ கொலைகளை தடுக்க சிறப்பு சட்டமியற்ற வேண்டும், பெண்கள், குழந்தைகள் மீதான தொடரும் பாலியல் வன்கொடுமைகளை தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை மாநகரில் போதை பொருட்கள் புழக்கத்தை தடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். சாதி ஆவணப் படுகொலைகள் அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்க சிறப்பு சட்டமியற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News