கோவை ஆட்சியர் சமீரனுக்கு கொரோனா தொற்று
கோவை ஆட்சியர் சமீரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து முகாம் அலுவலகத்தில் தனிமைப்படுத்தி கொண்டார்.;
கோவையில் கடந்த 4 நாட்களாக கொரோனா தொற்று பாதிப்புகள் குறைந்து வருகிறது. இருப்பினும் தினசரி 3500 க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்புகள் உறுதியாகி வருகிறது.
இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, மருத்துவ பரிசோதனை செய்தார். அதில் ஆட்சியர் சமீரனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து முகாம் அலுவலகத்தில் அவர் தனிமைப்படுத்தி கொண்டார்.