கோவை அவிநாசி சாலை மேம்பாலத்தில் பக்க சாலைகள் அமைக்கும் பணி

கோவை அவிநாசி சாலை மேம்பாலத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பக்க சாலைகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது

Update: 2022-02-26 08:46 GMT

அவினாசி சாலை மேம்பால பணிகள் 

10.01 கி.மீ., நீளத்திற்கு அவிநாசி மேம்பாலப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அவிநாசி ரோடு மேம்பாலத்தில், பக்கவாட்டு பாதைகள் அமைக்கும் பணியை, மாநில நெடுஞ்சாலைத்துறை விரைவில் துவக்க உள்ளது.  ஏர்போர்ட் ரோடு-அவிநாசி ரோடு-காளப்பட்டி ரோடு சந்திப்பு அருகே இந்த பக்கவாட்டு பாதைகள் அமைக்கப்படும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உப்பிலிபாளையத்தில் இருந்து கிட்டத்தட்ட 10 கி.மீ.க்கு ரூ.1,157 கோடி செலவில் அவிநாசி ரோடு மேம்பாலம் நான்கு இடங்களில் ஏறி இறங்கும் பாதைகள் அமைக்கப்படும். மேம்பாலத்தின் பிரதான பாதைக்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது சாலை சந்திப்புகளில் உள்ள தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

 உள்கட்டமைப்புப் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்த சிறப்புப் பிரிவுகள் விரைவில் அமைக்கப்படும் என மாநில அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. தற்போது உள்ளாட்சித் தேர்தல் முடிந்துவிட்டதால், நிலம் கையகப்படுத்தும் அதிகாரிகளின் நியமனத்திற்கு பின், கோயம்புத்தூர் மாவட்டத்தில் கிட்டத்தட்ட 20 திட்டங்களில் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது

மேம்பாலம், சாலைப் பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளை அரசு விரைவில் மேற்கொள்ள அதிகாரிகளை நியமிக்க வேண்டும். நிலம் கையகப்படுத்தப்படவேண்டியுள்ளதால் பல பணிகள் நிலுவையில் உள்ளன.

உள்கட்டமைப்புத் திட்டங்களை சரியான நேரத்தில் நிறைவேற்றுவது மிகவும் முக்கியமானது.  நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதால் திட்டங்கள் தாமதமாகின்றன. நிலம் கையகப்படுத்தும் முக்கிய திட்டங்களில் அவிநாசி ரோடு மேம்பாலம் மற்றும் மேற்கு பைபாஸ் ரோடு ஆகியவை அடங்கும்

Tags:    

Similar News