சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கிரஸ் கட்சியினர் புகார் மனு

சீமானை கைது செய்ய வேண்டுமென, கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.;

Update: 2021-10-11 08:15 GMT

புகாரளிக்க வந்த காங்கிரஸ் கட்சியினர்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய வேண்டுமென,  கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

அவர்கள் அளித்த புகார் மனுவில்,  கடந்த 9ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி குறித்தும், முன்னாள் தலைவர் ராஜிவ் காந்தி குறித்தும் தரக்குறைவாக பேசியது வாட்ஸ் அப் மூலம் தெரிய வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். தரக்குறைவாகவும், கண்டிக்கத்தக்க வகையில் வன்முறையை தூண்டும் வகையில் பேசிய சீமானை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Tags:    

Similar News