கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மாநகராட்சி மேயர் புகார் மனு

வாட்ஸ்அப் -இல் தனது பெயரை வைத்து மோசடி செய்வதாக கோவை மாநகராட்சி மேயர் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார்

Update: 2022-07-09 06:30 GMT

கோவை மாநகராட்சி மேயர் பெயரில் உலா வந்த மோசடி  பதிவு

கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மாநகராட்சி மேயர் புகார் மனு

கோவை மாநகராட்சி மேயர் எனது புகைப்படத்துடன் அடையாளம் தெரியாத அலைபேசி எண்கள் 93535 78966 மற்றும் 97191 07253 அன்று whatsapp செய்தி ஆங்கிலத்தில் கீழ்க்கண்டவாறு அனுப்பப்பட்டுள்ளது.அவசர கூட்டத்தில் இருப்பதாகவும் அமேசான் ஈ பே கிப்ட் வலைத்தளம் மூலமாக பணம் செலுத்தி பெற்றுள்ளது குறித்த தகவலுடன் மீண்டும் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த செய்தியை பெற்றுக் கொண்ட மாநகராட்சி அலுவலர்கள் சந்தேகத்தின் பேரில் இது குறித்து எனது கவனத்திற்கு கொண்டு வந்த போதுதான் இந்த விவரம் தெரியவந்தது.இந்த தொலைபேசி எண் என்னுடையது அல்ல அலைபேசி எனக்கோ எனது உறவினர்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை

குற்ற நோக்கத்துடன் எனது பெயருக்கு குற்ற நோக்கத்துடன் எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் எனது புகைப்படத்துடன் கூடிய இந்த whatsapp செய்தியை மாநகராட்சி அலுவலர்களுக்கு அனுப்பிய நபர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கோவை மாநகராட்சி மேயர் கல்பனா தெரிவித்துள்ளார்

Tags:    

Similar News