ஸ்கேட்டிங் செய்து கொண்டு கலாம் ஓவியம்: கோவை மாணவர்கள் சாதனை

கோவையில், ஸ்கேட்டிங் செய்து கொண்டு அப்துல் கலாம் ஓவியம் வரைந்து மாணவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.;

Update: 2022-04-15 04:00 GMT

ஸ்கேட்டிங் செய்தபடியே ஓவியம் வரைந்த மாணவி.

எஸ்.கே ஸ்பீட் ஸ்கேட்டிங் மற்றும் அசிட் வேல்ட் ரெக்கார்டு சார்பில் ஸ்கேட்டிங் மாணவர்கள் உலக சாதனை செய்யும் நிகழ்ச்சி கோவை குனியமுத்தூர் மைல்கல் அருகே உள்ள ப்பீள் பள்ளியில் இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியினை ப்பீள் பள்ளி இயக்குனர்கள் குமரகுரு, சிவப்பிரகாசம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.


எஸ்.கே ஸ்பீடு ஸ்கேட்டிங் மாணவரும், சவுடேஸ்வரி வித்யாலயா பள்ளி நாலாம் வகுப்பு மாணவருமான சுதன், ஸ்கேட்டிங் செய்து கொண்டே அப்துல் கலாம் ஓவியத்தை 2 நிமிடங்கள் 49 வினாடிகளில் வரைந்து உலக சாதனை செய்தார். ப்பீள் பள்ளி 7ம் வகுப்பு மாணவன் மதுமுகிலன் ஸ்கேட்டிங் செய்துகொண்டு 4 நிமிடங்கள் 38 வினாடிகளில் 10 கியூப் களை சரி செய்து, உலக சாதனை நிகழ்த்தினார்.



இதேபோல் மல்லையன் பள்ளி 4ம் வகுப்பு மாணவி மகிதாஸ்ரீ 34 வினாடிகளில் 27 முறை ஸ்கிப்பிங் செய்து உலக சாதனை நிகழ்த்தினார். தொடர்ந்து உலக சாதனை செய்தவர்களுக்கு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்ப்பட்டது. நிகழ்ச்சியில் எஸ்.கே ஸ்பீடு ஸ்கேட்டிங் நிறுவனர் சசிக்குமார், செயலாளர் சதீஷ், பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News