ஒரே நிமிடத்தில் 1330 திருக்குறள் எழுதி கோவை பள்ளி மாணவ, மாணவிகள் உலக சாதனை முயற்சி

சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவை புதூர் மெட்ரிக் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் இன்க் பேனாவில் ஒரே நிமிடத்தில் 1330 திருக்குறள் எழுதி உலக சாதனை முயற்சி செய்தனர்.

Update: 2022-07-16 05:11 GMT

1330 திருக்குறளை ஒரே நிமிடத்தில் ஆஸ்ரமம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் இணைந்து எழுதி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.

காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளிகளில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கோவை மாவட்டம், கோவை புதூர் ஆஸ்ரமம் மெட்ரிக் பள்ளியில் காமராஜர் பிறந்த தின விழா நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் தேவேந்திரன் தலைமையில் நடைபெற்ற விழாவில், நிர்வாக அலுவலர் கௌரி உதயேந்திரன், செயலாளரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தாய்த்தமிழ் உலக சாதனை புத்தகத்தின் நிறுவனர் பால்ராசு அனைவரையும் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர்களாக, கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றி செல்வன், இளம்படை இயக்குனர் சித்ரவேல், இக்னீசியஸ் பிரபு, வழக்கறிஞர் சிவஞானம், டிஸ்கோ காஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவின் ஒரு பகுதியாக ஸ்வீப்பர்ஸ் ஏன்தெம் எனும் தூய்மை பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக சாய் புவனேஸ் எழுதிய பாடல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து, ஆஸ்ரமம் பள்ளி மாணவ, மாணவிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி புதிய உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.

அதன் படி பள்ளிகளில் பயன்படுத்தப்படும் பால் பாயிண்ட் பேனா எனும் பிளாஸ்டிக் ரக பேனாவால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மை ஊற்றி எழுதும் பேனாவை பயன்படுத்தி 1330 திருக்குறளை ஒரு நிமிடத்தில் ஆஸ்ரமம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் இணைந்து எழுதி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.

நிகழ்ச்சியில் வித்யாஸ்ரமம் பள்ளி நிர்வாகி சௌந்தர்யா,மற்றும் ஆஸ்ரமம் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், ஊழியர்கள், பெற்றோர் என பலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து பள்ளி நிர்வாகி தேவேந்திரன் மற்றும் கௌரி உதயேந்திரன் ஆகியோர் கூறுகையில், பள்ளி மாணவர்களிடையே மை ஊற்றி எழுதும் பேனாவில் எழுதுவதை ஊக்குவிக்கும் விதமாக இந்த சாதனை நிகழ்வை நடத்தியதாக தெரிவித்தனர்.. மாணவர்களின் இந்த சாதனையை தாய்த்தமிழ் உலக சாதனை புத்தகத்தின் ஒருங்கிணைப்பாளர் சமாதான மேரி தொகுத்து வழங்கினார்.

Tags:    

Similar News