கோவை மாநகராட்சியில் சாலைகள் மோசம்: பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் புகார்

சாலைகளை கூடிய விரைவில் சீரமைக்கவில்லை என்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றார் வானதிசீனிவாசன்

Update: 2021-12-19 11:15 GMT

கோவையில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி

கோவை மாநகராட்சிப்பகுதியில் மோசமான நிலையில் சாலைகளை  விரைவில் சீரமைக்கவில்லை என்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றார் பாஜக எம்எல்ஏ வானதிசீனிவாசன்

கோவையில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு  அளித்த பேட்டியில் மேலும் அவர் கூறியதாவது:  தமிழகத்தில் மழை வெள்ளத்திற்கு பிறகு அரசின் வழக்கமான செயல்முறைகள் நடைபெற்று வரும் நிலையில், கோவை பொள்ளாச்சி பகுதியில் செயல்பட்டு வரும் காயர் தொழிற்சாலைகள் சிறு குறு காயர் தொழில் நிறுவனங்களில் ஆளும் கட்சியின் பெயரை பயன்படுத்தி, குறிப்பாக அமைச்சர்கள் பெயரை குறிப்பிட்டு வசூல் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன. இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்க தயங்குவதாகவும், தமிழக முதல்வர் இதில் கவனம் செலுத்தி பணம் வசூலிப்பவர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் .

 ஜனவரி முதல் கைத்தறி ரகங்களுக்கு 12% ஜி.எஸ்.டி அதிகரிப்பதாக ஜி.எஸ்.டி கவுன்சில் தெரிவித்துள்ள நிலையில் இதற்கு விளக்களிக்க வேண்டும் என நாங்கள் கேட்டு கொள்வதாகவும், இது தொடர்பாக மத்திய மாநில நிதி அமைச்சர்களிடம் கோரிக்கை வைக்கிறோம் என கூறினார். தமிழக முதல்வரும் இந்த கோரிக்கையை தமிழக நிதி அமைச்சர் மூலம் வலியுறுத்தி நிறைவேற்ற வேண்டும். கோவை மாநகராட்சியை பொறுத்த வரை குப்பைகளை எடுப்பது என்பது மிகவும் மோசமடைந்து வருகிறது. ஒவ்வொரு முறையும் மக்கள் இந்த பிரச்னையை தான் முன் வைக்கின்றனர்.  சாலைகள் மோசமாக நிலையில் உள்ளன. சாலைகளை கூடிய விரைவில் சரி செய்வதாக கூறியுள்ளார்கள் ஒரு மாத காலத்தில் அதனை செய்யவில்லை என்றால் மக்களை திரட்டி போராடுவதை தவிர்த்து வேறு வழியில்லை.

கேரளா பாஜக ஓபிசி செயலாளர் படுகொலை  கேராளாவில் மத தீவிரவாதத்தை வளர்க்க கூடிய குழுக்கள் அவர்களுக்கு ஆதரவாக இருக்க கூடிய கம்யூனிஸ்ட் அரசாங்கத்தால் தற்போது நிகழ்ந்துள்ளது  இந்த படுகொலையை என்.ஐ.ஏ விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். இந்த கொலைகளை அந்நிய நாட்டில் திட்டமிட்டு செய்யப்பட கூடிய படுகொலைகளாகவே நாங்கள் பார்க்கிறோம். மாநில அரசாங்கம் இதனை கண்டறிவதை கைவிடவேண்டும். என்ஐஏ விசாரணை நடத்த  வேண்டும் என்றார் வானதிசீனிவாசன். 

Tags:    

Similar News