கோவை உள்ளாட்சி தேர்தலில் இதுவரை 35 பேர் வேட்புமனு தாக்கல்
கோவை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சி, 33 பேரூராட்சிகளில் உள்ள 811 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.;
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சி, 33 பேரூராட்சிகளில் உள்ள 811 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பதவிகளுக்கு போட்டியிடுபவர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்து வருகின்றனர். முதல் நாளில் யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யாத நிலையில், இரண்டாவது நாளில் 2 பேர் மட்டுமே வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் மூன்றாவது நாளான இன்று 33 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதில் கோவை மாநகராட்சியில் இன்று 12 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். பேரூராட்சிகளில் 15 பேரும், நகராட்சிகளில் 8 பேரும் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இதனால் இதுவரை வேட்பு மனுத்தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. பிரதான அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு முடிந்து வேட்பாளர்களை அறிவித்த பின்னர், அதிக எண்ணிக்கையிலான நபர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.