கோவை மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் மறியல் போராட்டம்
கட்டுமான பொருட்களின் விலை உயர்வை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என போராட்டம் நடத்தப்பட்டது.;
கோவை காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் மாநில அரசு பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கோவை மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். பெண்களுக்கு 55 வயதில் இருந்தே பென்சன் வழங்க வேண்டும், நலவாரியம் தொடர்பான ஆன்லைன் பதிவுகளை எளிமையாக்க வேண்டும், கட்டுமான பணி மேற்கொள்ளும் இடத்தில் பெண்களுக்காக கழிப்பறை வசதியினை ஏற்படுத்த வேண்டும். கட்டுமான பொருட்களின் விலை உயர்வை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளிகளுக்கு மாத ஓய்வூதியம் 3000 ரூபாயும் இயற்கை மரணம் அடைந்த பிறகு 2 லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது. சாலை மறியலில் ஈடுப்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த போராட்டம் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.