தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை கலெக்டர் சமீரன்

கோவையில் கலெக்டர் சமீரன் தனியார் பள்ளி வாகனங்களை நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2021-10-07 09:45 GMT

ஆட்சியர் சமீரன் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் உள்ள பிஆர்எஸ் மைதானத்தில் தனியார் பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வின் போது வாகனத்தின் உள்ளே சென்று முதலுதவி பெட்டி, தீயணைப்பான் கருவி ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சமீரன், இன்று 309 பள்ளிகளில் உள்ள வாகனங்கள் ஆய்வு செய்யப்படுகிறது. நான்கு நாட்களுக்கு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும். இதில் முதலுதவிப் பெட்டி, அவசரகால கதவுகள், சனிடைசர் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்படுகிறது.

மாணவர்கள் வாகனங்களில் செல்லும் போது கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும். குறிப்பாக 230 பள்ளிகளில் உள்ள 1226 வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News