பாஜக ஸ்தாபன தினத்தை முன்னிட்டு கோவையில் கட்சிக்கொடி ஏற்றம்
கோவையில், பாஜக நிறுவப்பட்ட தினத்தை முன்னிட்டு, 100 வார்டுகளில் கட்சிக்கொடி ஏற்றப்பட்டது.;
கோவையில், பாஜக கொடியேற்ற நிகழ்வில் பாதயாத்திரையாக சென்று பங்கேற்ற கட்சி பிரமுகர்கள்.
கோவையில், பாஜகவின் ஸ்தாபன தினத்தை முன்னிட்டு, 100 வார்டுகளில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டு, பிரதமர் மோடி காணொலி மூலம் நேரடியாக உரையாற்றும் நிகழ்ச்சியை அனைத்து பகுதிகளுக்கும் ஒளிப்பரப்பட்டது
இதை முன்னிட்டு, பாஜக தேசிய இளைஞர் அணி துணைத்தலைவர் மற்றும் மாவட்ட பொறுப்பாளர் முருகானந்தம் தலைமையில் லட்சுமி மில் அருகே கொடியை ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கட்சியின் கொள்கைகளை விளக்கி பாத யாத்திரையை மேற்கொண்டனர். இதில், பாஜக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கோவையில் 100 வார்டுகளிலும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.