கோவையில் குட்டி காவலர் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்

New Government Schemes -சாலை பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக குட்டி காவலர் என்ற புதிய திட்டத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Update: 2022-10-13 06:30 GMT

குட்டி காவலர் திட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் 

New Government Schemes - தமிழக அரசு மற்றும் கோயம்புத்தூரில் இயங்கி வரும் உயிர் அறக்கட்டளை இணைந்து குட்டி காவலர் என்ற மாணவர்களுக்கான சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. விபத்து நடக்கும் இடங்களை அடையாளம் கண்டு, அதற்கான தீர்வுகளையும் உயிர் அமைப்பு வழங்கி வருகிறது

பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கல்வியை அறிமுகப்படுத்தும் நோக்கில், 'குட்டி காவலர்' திட்டம், உயிர் அமைப்பு சார்பில் கோவையில் தொடங்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பரன்சிங் முறையில், சென்னையில் இருந்து இத்திட்டத்தை தொடங்கி வைத்தார் . சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடத்திட்டங்கள் அடங்கிய ஆசிரியர் விளக்க கையேடுகளையும் வெளியிட்டார்

பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றி நன்கு வடிவமைக்கப்பட்ட பாட திட்டத்தின் மூலம் சாலைப் பாதுகாப்பு குறித்து கற்பித்து, அவர்களை சாலைப் பாதுகாப்பின் தூதுவர்களாக மாற்றுவதே குட்டி காவலர் திட்டத்தின் நோக்கம்.

சோதனை முயற்சியாக, 40 பள்ளிகளில் தொடங்கப்பட்ட இந்த பாடத்திட்டம், 2022-23ம் கல்வியாண்டு முதல் கோவை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட உள்ளது.

முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பரன்சிங் முறையில், சென்னையில் இருந்து இத்திட்டத்தை தொடங்கி வைத்தார் . சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடத்திட்டங்கள் அடங்கிய ஆசிரியர் விளக்க கையேடுகளையும் வெளியிட்டார்

சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பெற்றோர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் மாணவர்கள் பரப்பும் வகையில், 5 ஆயிரம் மாணவர்கள் கோவை கொடிசியா வர்த்தக மையத்திலும், 4.50 லட்சம் மாணவர்கள் கோவை மாவட்டத்தில் அந்தந்த பள்ளி வளாகத்தில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

அதில், "நான் இன்று முதல் குட்டி காவலராகப் பொறுப்பேற்கிறேன். நான் எனது பயணத்தின் போது சாலை விதிகளை கவனமாக கடைபிடிப்பேன் என்றும், எனது உறவினர்களையும், நண்பர்களையும் சாலை விதிகளை பின்பற்றுமாறு அறிவுறுத்துவேன் என்றும் உறுதி ஏற்கிறேன்.

ஓடும் பேருந்தில் ஏறுவதோ, இறங்குவதோ கூடாது என்பதை அறிவேன். இருசக்கர வாகன பயணத்தில் தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும், நான்கு சக்கர வாகனப் பயணத்தில் இருக்கைப்பட்டை அணிய வேண்டும் என்றும் உணர்த்துவேன்.

இந்த சாலை பாதுகாப்பு உறுதி மொழியை நான் முழுமையாகப் புரிந்து கொண்டு அதை உளமார பின்பற்றுவேன் என்றும் உறுதி கூறுகிறேன்". என உறுதி மொழி எடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து குட்டி காவலர் திட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் 3 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு குறித்த மாணவர் பயிற்சி கையேட்டினையும், ஆசிரியர்களுக்கான வழிகாட்டி புத்தகத்தையும் முதல்வர் வெளியிட்டார்.

இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, ஆசிய சாதனை புத்தகமான Asia Book of Recordsஇல் இடம்பெற்றது. அதற்கான சான்றிதழும் தமிழக முதல்வரிடம் வழங்கப்பட்டது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News