பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து, சிஐடியு வாகன நிறுத்த போராட்டம்

நாடு முழுவதும் இன்று ஒரு நாள் 12 மணியில் இருந்து 12:10 வரை வாகனங்களை நிறுத்தும் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.;

Update: 2021-12-10 08:30 GMT

சிஐடியு வாகன நிறுத்த போராட்டம்.

மத்திய அரசு உடனடியான உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை குறைக்க வலியுறுத்தும் வகையில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் நாடு முழுவதும் இன்று ஒரு நாள் 12 மணியில் இருந்து 12:10 வரை வாகனங்களை நிறுத்தும் போராட்டத்தை அறிவித்திருந்தனர். இந்நிலையில் கோவை மாவட்ட சிஐடியுவினர் காந்திபுரம்  சிக்னலில் வாகன நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். முதலில் பெட்ரோல், டீசல், கேஸ் விலையை குறைக்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பிய அவர்கள் திடீரென அவ்வழியாக சென்ற வாகனங்கள் தடுத்தி நிறுத்தினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை கைது செய்து அழைத்து சென்றனர். இதனால் காந்திபுரம் சிக்னலில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News