பள்ளிகளில் குழந்தை பாதுகாப்பு குழு: கோவை ஆலோசனை கூட்டத்தில் தகவல்
பள்ளிகளில் விரைவில் குழந்தை பாதுகாப்பு குழு அமைக்கப்படும் என்று, மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ராமராஜ் தெரிவித்தார்.;
கோவை மாவட்டத்தில் குழந்தை பாதுகாப்பு குழுக்களை வலுப்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ராமராஜ் பங்கேற்று ஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்தில் அவர் பேசுகையில், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது அவசியம். அதேபோல், குற்றச்செயலில் குழந்தைகள் ஈடுபடாமல் இருக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்கு சிறப்பு திட்டம் செயல்படுத்த, அரசு தீவிரம் காட்டி வருகிறது.
அவ்வகையில், முதல் கட்டமாக பள்ளிகளில் குழந்தை பாதுகாப்பு குழு அமைக்க, கல்வித்துறை இயக்குனர்களுடன் ஆலோசனை நடைபெற்றுள்ளது. தற்போது பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகிறது. எனவே, விரைவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.