பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி மாட்டுவண்டியில் வந்து பாஜக ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசும் விலையை குறைக்க வேண்டுமெனக் கோரி தமிழ்நாடு பாஜகவினர் மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-11-26 11:30 GMT

 பெட்ரோல் டீசல் விலையை குறைக்க கோரி பாஜக ஆர்ப்பாட்டம்.

மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு பெட்ரோல், டீசல் விலையை குறைத்த நிலையில், அதனை தொடர்ந்து விலை குறைந்தது. இந்நிலையில் தமிழ்நாடு அரசும் விலையை குறைக்க வேண்டுமெனக் கோரி தமிழ்நாடு பாஜகவினர் மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அக்கட்சியின் விவசாய அணி சார்பில் இன்று போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி பாஜகவில் விவசாய பிரிவினர் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் மாட்டுவண்டியில் வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பாஜக மாநில விவசாயிகள் அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டு தமிழ்நாடு அரசை கண்டித்தும், உடனடியாக பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பினர். மேலும் திமுக அரசு மக்களை வஞ்சிப்பதாகவும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றுவதாகவும் அப்போது அவர்கள் குற்றம் சாட்டினர்.

Tags:    

Similar News