அனைத்து நாளிலும் கோவிலை திறக்கக்கோரி தீச்சட்டி ஏந்தி பாஜக ஆர்ப்பாட்டம்

வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் கோவில்களை திறக்கக்கோரி, கோவையில் பாஜகவினர் தீச்சட்டி ஏந்தி போராடினர்.;

Update: 2021-10-07 08:30 GMT

கோவில்களை அனைத்து நாட்களிலும் திறக்கக் கோரி, கோவையில் போராட்டம் நடத்திய பாஜகவினர்.

கொரொனா பரவலை தடுக்கும்  நடவடிக்கை என்று கூறி, வார இறுதி நாட்களாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் கோவில்களில் பக்தர்களுக்கு தடை விதித்துள்ளது. மேலும் விஷேச நாட்களிலும் கோவில்களில் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில்,  அனைத்து நாட்களிலும் கோவில்களை திறக்க வலியுறுத்தி, கோவை தண்டு கோவில் அருகில் 200க்கும் மேற்ப்பட்ட பாஜகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்,  பெண்கள் தீச்சட்டி ஏந்தியும் குலவை போட்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.டாஸ்மாக் திறக்க அனுமதி , பள்ளிகள் திறக்க அனுமதி; ஆனால் கோவில்களை திறக்க மட்டும் தடையா? போன்ற பதாகைகளை ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பினர். இதில் மேடை அமைத்து காளி நடனம் போன்ற நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

Tags:    

Similar News