பாரத மாதா வேடமணிந்து வந்து வேட்புமனு தாக்கல் செய்த பாஜக வேட்பாளர்
கோவையில் பாரத மாதா வேடமணிந்து வந்து பாஜக வேட்பாளர் மனு தாக்கல் செய்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.;
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய இறுதி நாளான இன்று, ஏராளமான வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்து வருகின்றனர். கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட கணபதி பகுதியில் உள்ள 19வது வார்டில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அமுதகுமாரி (40) தாமரை மலையுடன் பாரத மாதா வேடமணிந்து வடக்கு மண்டல அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
இவர், தனியார் செய்தி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக இவர் பணியாற்றி வருகிறார். பாரதிய ஜனதா கட்சி பெண்களுக்கு பல்வேறு முன்னுரிமைகளை வழங்கியுள்ளதாலும், பாரதமாதாவை போற்றும் விதமாகவும் இது போன்று வேடமணிந்து வேட்புமனு தாக்கல் செய்ததாகவும் அமுதகுமாரி தெரிவித்தார்.