அகில இந்திய மக்கள் உரிமை சட்ட விழிப்புணர்வு கழகத்தின் முப்பெரும் விழா
அகில இந்திய மக்கள் உரிமை சட்ட விழிப்புணர்வு கழகத்தின் முப்பெரும் விழா கோவையில் நடைபெற்றது.;
அனைத்து தரப்பினரும் பெரும் பயன்பெற சட்ட விழிப்புணர்வு நிகழ்வுகள், ஏழை எளிய மக்கள் பயன்பெற நலத்திட்ட உதவிகள் , சமுக பணியினை ஊக்குவிக்க சாதனையாளர்களுக்கு விருதுகள், மருத்துவ முகாம்கள், விளையாட்டு போட்டிகள் என சகலரும் பயன் பெறும் அமைப்பாக அடித்தளமிட்டு களப்பணிகள் மற்றும் சமூக பணிகளை அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆர்.கே. குமார் தலைமையில் தமிழகத்தில் செய்து வருகிறது அகிலஇந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம்.
இந்த அமைப்பின் முப்பெரும்விழா கோவையில் உள்ள கேரளா கிளப்பில் நடைபெற்றது. நிகழ்விற்கு அமைப்பின் நிறுவன தலைவர் ஆர்.கே.குமார் தலைமை வகித்தார். மாநில தலைவர் மூத்த வழக்கறிஞர் சுந்தரவடிவேலு சிறப்புரையாற்றினார்அகில இந்திய பொது செயலாளர் வி.எச்.சுப்பிரமணியம் வரவேற்று பேசினார்
சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற நீதிபதியும் சிறந்த தமிழ் உணர்வாளருமான ஏ.முகமதுஜியாபுதீன் கலந்து கொண்டு அற்புதமான பேருரையாற்றினார்
அவர்தம் உரையில் மகளிருக்கான பாதுகாப்புக்கு தேவையான பல வழிமுறைகளை சிறப்பாக எடுத்துரைத்தார். முத்தாய்பாக உலகமறையாக போற்றப்படும் தமிழர்களின் தலையாய அய்யன் திருவள்ளுவரின் திருக்குறளின் சிறப்பை மகத்தான மாண்பை அற்புதமாக சுவையாக கூறி பேருரையாற்றினார்
அவரின் நீண்ட பேருரை சலிக்காத நல்லுரையாக அனைவரையும் கவர்ந்தது அவரி்ன் குடும்பமே மத நல்லிணக்கனத்துக்கு உதாரணமாக இருக்கும் குடும்பம் என்பது குறிப்பிடதக்கதாகும். அவரது பேருரை அனைவருக்கும் பயனுள்ளதாக அமைந்தது
சிறப்புரை ஆற்றிய காவல்துறை உதவி ஆணையர் (ஓய்வு) கே.ராமச்சந்திரன் தனது உரையில் பெண்கள் தைரியமாக இருக்க விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். அவர்கள் பிரச்சனைகளுக்கு ஆளாகும் போது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தயங்காமல் முன் வரவேண்டும். முகநூல் சமூக வலைத்தளங்களில் வாயிலாக பழகும் நபர்களை முழுமையாக நம்பிவிட கூடாது விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார்.
முப்பெரும் விழாவின் முத்தாய்ப்பு நிகழ்வாக சாதித்த மகளிரை பாராட்டி அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.கழக பொறுப்பாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டுவரும் ,திருச்சி மற்றும், நீலகிரி மாவட்ட நிர்வாகிகளுக்கும் சமுக சேவகர் உலிக்கல் சண்முகம் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கோவை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சுந்தரபாலன், துணை தலைவர்கள் எஸ்.என். பாலசுப்ரமணியம்,வழக்கறிஞர் ஜெயபிரகாஷ், லயன் எஸ்.செந்தில்குமார்,ஊட்டி தமிழ்வெங்கடேசன், ஓய்வு பெற்ற ஆர்.டி.ஓ.கிருஷ்ணசாமி, திருச்சி ஆர்.ஏ.தாமஸ் ஆர். விஸ்வநாதன், ஆர்.ரமேஷ்குமார்,பாலகிருஷ்ணன்,டாக்டர் பரமேஷ்வரன், எம்.ரவிபிரகாஷ், இணை செயலாளர்கள் எம்.விஜயராவ்,எம்.ஜான் நிக்கோலஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் திருச்சி மாவட்ட பொறுப்பாளர்கள் கெளரவ தலைவரும் சட்ட ஆலோசகருமான வழக்கறிஞர் அண்ணாதுரை,துணைத் தலைவர் என்ஜினீயர்செந்தில்குமார், செயலாளர் ரோட்டரியன் நாகராஜன், மகளிர் அணி செயலாளர் வழக்கறிஞர் கார்த்திகா, விளையாட்டு பிரிவு செயலர் சுரோஷ்பாபு, மகளிர் அணி இணைச் செயலர் அல்லிக்கொடி அஸ்வின் ஜோன்ஸ், சென்னை மத்திய மாவட்ட செயலர் ராஜா மகேந்திரன் மற்றும் அகிலஇந்திய மக்கள் உரிமை மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர். ஏ. தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
நிகழ்ச்சியை அமைப்பின் மகளிர் அணி செயலர் முத்தமிழ் செல்வி தொகுத்து வழங்கினார். நிகழ்வின் முடிவில் செல்வி ஐஸ்வர்யா நன்றி கூறினார்.