பில்லூர் கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் 60 சதவீதம் நிறைவு: உள்ளாட்சித்துறை அமைச்சர் நேரு பேட்டி
Drinking Water On Construction Sites -பில்லூர் கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் 60 சதவீதம் நிறைவடைந்து விட்டதாக, தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் நேரு தெரிவித்தார்.;
பில்லூர் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை நேரில் ஆய்வு செய்தார், உள்ளாட்சித்துறை அமைச்சர் நேரு. அருகில் அதிகாரிகள்.
Drinking Water On Construction Sites - கோவை மாநகராட்சியில் பொதுமக்களுக்கு சிறுவாணி, பில்லூர் கூட்டுக்குடிநீர் திட்டம் 1, 2 மற்றும் வடவள்ளி கூட்டுக் குடிநீர் திட்டம், குறிச்சி குடிநீர் திட்டம் ஆகிய திட்டங்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதன் மூலம் மாநகராட்சிக்கு ஒரு நாளைக்கு சுமார் 23 கோடி லிட்டர் குடிநீர் கிடைத்து வருகிறது.
மொத்தம் 779 கோடி ரூபாயில் பில்லூர் குடிநீர் திட்டமும் 3 செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக மேட்டுப்பாளையம், நெல்லித்துறை ஊராட்சி, மருதூர் ஊராட்சி, தண்டி பெருமாள்புரம் ஆகிய இடங்களில் நீரேற்றும் நிலையம் உள்பட பல்வேறு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் கோவை மாநகராட்சி பகுதிக்கு கூடுதலாக 178 எம். எல்.டி அதாவது 17 கோடி லிட்டர் குடிநீர் கிடைக்கும். இதனால் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க முடியும்.
மேட்டுப்பாளையம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் இருக்கும் பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு, ராட்சத குழாய்கள் மூலம் நீரேற்றும் நிலையத்துக்கு கொண்டு வரப்படுகிறது. குழாய்களை கொண்டு வரும் வழியில் தண்டிபெருமாள்புரம் பகுதி அருகே கட்டாஞ்சி என்ற மலை உள்ளது. 3-வது குடிநீர் திட்டத்துக்கு இந்த மலையில் குகை அமைத்து ராட்சத குழாய்கள் அமைக்க 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரூ.61 கோடியே 35 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, 900 மீட்டர் தூரத்துக்கு மலையை குடைந்து குகை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.
இப்பணியை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் முக்கிய திட்டங்களை மேற்கொள்ளும் பிரிவு மேற்கொண்டது. அதன்படி கட்டாஞ்சி மலையில் சுரங்கம் அமைக்கும் பணி முழுவதும் முடிவடைந்து உள்ளது. இதர பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், கோவை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்த்துறை அமைச்சர் நேரு தலைமையில், தொழிலாளர் நலம் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் முன்னிலையில் குடிநீர் திட்டப்பணிகள் விரைந்து செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், கோவை மாநகராட்சி, குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட தொடர்பு துறை அலுவலர்கள் மற்றும் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், ஆட்சியர் சமீரன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் நேரு, பில்லூர் கூட்டு குடிநீர் திட்டத்தை ஆய்வு செய்தார். பின்னர் , விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து, கட்டஞ்சி மலை சுரங்கப்பாதை மற்றும் நீரேற்று நிலையங்களை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில்; பில்லூர் முடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருவதாகவும், நிலம் கையகப்படுத்த பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், 178 எம்.எல்.டி கோவைக்கு மட்டும் குடிநீர் வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
கேரளாவில் இருந்து 98 எம்.எல்.டி தண்ணீருக்கு பதில், 39 .எம்.எல்.டி குடிநீர் குறைவாகத்தான் தருவதாகவும் அதை சரி செய்து அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும் எனவும், அந்த பணிகளுகளை ஆய்வு மேற்கொள்ள தான் வந்தாகவும் அமைச்சர் கூறினார்.
மேலும், பணிகள் நிறைவு பெற்றால் 178 எம்.எல்.டி தண்ணீரும் கிடைக்கும் என்றும், இன்னும் 2 மாதங்களில் தண்ணீர் பஞ்சம் இருக்காது என்று கூறிய அவர், பில்லூர் அணையின் சேற்றை அகற்ற துறை அமைச்சரிடம் பேசி தூர் வாரப்படும் என்றும், தற்போது பில்லூர் குடிநீர் திட்ட பணிகள் 60 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் நேரு தெரிவித்தார்.
ஆய்வின்போது, ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மேயர் கல்பனா, துணைமேயர் வெற்றிச்செல்வன் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் நா.கார்த்திக், பையா ஆர்.கிருஷ்ணன், சி.ஆர்.இராமச்சந்திரன், மருதமலை சேனாதிபதி மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2