காவலர் குடியிருப்பில் 32 சவரன் தங்க நகை கொள்ளை
காவலர் குடியிப்புக்குள் புகுந்த மர்ம நபர் அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.;
கோவை பி ஆர் எஸ் காவலர் குடியிருப்பில் உதவி ஆணையர் முதல் காவலர் வரை ஆயிரம் பேர் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியிலிருந்து வந்த மர்ம நபர் ஒருவர் காவலர் குடியிப்புக்குள் புகுந்து அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். ஆயுதப்படை காவலர் ரமேஷ் என்பவரது வீட்டிற்கு பணி முடிந்து வந்துள்ளார். அப்போது அவரது வீட்டின் பூட்டை உடைத்து அங்கிருந்த லேப்டாப், பவர் பேங்க் ரெயின் கோட் திருடு போயுள்ளது.
இதே போல ஆயுதப்படை தலைமை காவலர் ராஜன் குடும்பம் வெளியூர் சென்று இருந்த நிலையில் , அவரது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 32 சவரன் தங்க நகை 90 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இத்திருட்டு குறித்து பந்தய சாலை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மர்ம நபர் ஒருவர் பாப்பநாயக்கன் பாளையம் வழியாக பி ஆர் எஸ் காவலர் குடியிருப்பிற்குள் புகுந்து கொள்ளையடித்து விட்டு , காவலர் மருத்துவமனை வழியாக செல்லும் சிசிடிவி கட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த மாதம் இதே பி ஆர் எஸ் காவலர் குடியிருப்பில் 42, 000 ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற நபர் தான், இந்த கொள்ளையிலும் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.