இணையவழித் தேர்வில் 3,000 பேர் 'பெயில்': பல்கலை.,யை கண்டித்து மாணவர்கள் போராட்டம்

இணைய வழியில் நடைபெற்ற தோ்வில் 3,000 மாணவா்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகப் பல்கலைக்கழகம் தெரிவித்தது.

Update: 2021-12-06 08:45 GMT

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள வேளாண் கல்லூரிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்காக கடந்த ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் இணைய வழியில் அரியா் தோ்வு நடைபெற்றது.

இதில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா். இதன் முடிவுகள் அண்மையில் வெளியாகின. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் தோ்ச்சி பெறவில்லை. இதற்கு இணைய வழியில் நடைபெற்ற தோ்வில் மாணவா்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகப் பல்கலைக்கழக நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பல்கலைக்கழக நிா்வாகத்தைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட வேளாண் கல்லூரி மாணவர்கள் இன்று கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கைகளில் பதாகைகளை ஏந்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கண்டன முழக்கங்களை எழுப்பிய அவர்கள் அதனைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 

Tags:    

Similar News