கோவை மாநகராட்சி கவுன்சிலர்கள் பதவியேற்பு

கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா மாமன்ற உறுப்பினர்களுக்கு பதவி பிராமணம் செய்து வைத்தார்.

Update: 2022-03-02 09:45 GMT

இலக்குமி இளஞ்செல்வி பதவியேற்பு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளில், 96 இடங்களில் திமுக கூட்டணியும், 3 இடங்களில் அதிமுகவும், ஒரு இடத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியும் வெற்றி பெற்றது. கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி, கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள விக்டோரியா ஹாலில் நடைபெற்றது. கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா மாமன்ற உறுப்பினர்களுக்கு பதவி பிராமணம் செய்து வைத்தார். பதவியேற்ற மாமன்ற உறுப்பினர்கள் 'பதவியேற்பு சென்னை உயர் நீதிமன்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்பதை நன்கு நான் அறிவேன்' எனக்கூறி பதவியேற்றனர். கோவையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததால் தேர்தலை ரத்து செய்யக்கோரி, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், மாமன்ற உறுப்பினர்கள் வெற்றி சான்றிதழிலும் இந்த நிபந்தனை குறிப்பிடப்பட்டு இருந்தது.

திமுக மாமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையோர் முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து பதவியேற்றுக் கொண்டனர்.திமுக மேயர் வேட்பாளர் போட்டியில் உள்ள மீனா லோகு, 22 வயது நிவேதா சேனாதிபதி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திமுக கிழக்கு மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக்கின் மனைவி இலக்குமி இளஞ்செல்வி ஆகியோர் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து பதவியேற்று கொண்டனர்.

Tags:    

Similar News