கோவையில் பல்வேறு இடங்களில் பலத்த மழை: சாலைகளில் வெள்ளம்
கோவையில் பல்வேறு பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
கோவையில் கடந்த சில நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் கருமேகம் சூழ்ந்து மேகமூட்டமாகக் காணப்பட்டது.
அதைத் தொடர்ந்து சுமார் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. உப்பிலி பாளையம், அவினாசி சாலை, அண்ணா சிலை, பாப்பநாயக்கன்பாளையம் கணபதி, சரவணம்பட்டி, டெஸ்டூல் பாலம், சித்தாபுதூர், காந்திபுரம், சிங்காநல்லூர், மாநகரில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதேபோல புறநகர்ப் பகுதியிலும் பரவலாக மழை பெய்தது.